Blogger Tricks

Flash News

Flash News:

Top Posts

Super scroll

Top Stories 10

Wednesday, 1 May 2013

10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும்-உயர்கல்வித் துறை அமைச்சர்

"திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார். 

இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: தே.மு.தி.க., -பாபு முருகவேல்: திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற, 40 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இவர்களின், கல்வித் தகுதி தான் இதற்குக் காரணமாக உள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர், திறந்த நிலை பல்கலையில், பட்டம் பெற்று, வேலை கிடைக்காமல் உள்ளனர். எனவே, திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
அமைச்சர் முனுசாமி: "திறந்தநிலை பல்கலையில், பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது' என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன. மார்க்சிஸ்ட்- ராமமூர்த்தி: திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், வெளியிடப்பட்ட இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்யவேண்டும். உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: 10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும். 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்பதே, முறை சார்ந்த கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த நிலை பல்கலையில் பயில்வது, முறை சாரா கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முறைசாரா கல்விக்கு, வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும் தகவலுக்கு ...

Wednesday, 20 February 2013

ஊதிய குறை தீர்க்கும் பிரிவு 31.3.13 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

ஊதிய குழு அறிக்கை 31.10.2012 ல் சமர்ப்பிக்கப்பட்டு,  அரசின் பரிசீலனையில் உள்ளது ,ஊதிய குறை தீர்க்கும் பிரிவு 31.3.13 வரை    
நீட்டிக்கப்  பட்டுள்ளது  









மேலும் தகவலுக்கு ...

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., "பகீர்' தகவல்


முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.

இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் தகவலுக்கு ...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) - 01.12.2011 முதல் 8.6% வட்டி வழங்க ஆணை


ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 30.11.2011 வரை 8%, 01.12.2011 முதல் 8.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணை எண்: 38 நாள்: 11-02-2013
மேலும் தகவலுக்கு ...

Sunday, 10 February 2013

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு ...

Thursday, 7 February 2013

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு



         நடுவண் அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதையடுத்து படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள்
நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர் இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள், ஒய்வு பெற்றவர்களுக்கு எவ்வித பணப்பலன் கொடுக்கப்படாமல் அக்குடும்பங்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. எனவே இத்திட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி துறையை சார்ந்த 33 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
             இவ்வழக்கானது (வழக்கு எண்.W.P.NO.2470/2013) நீதியரசர்.சந்துரு அவர்கள் முன்னிலையில் 31.01.2013 அன்று விசாரணைக்கு வந்தது. நீண்ட விவாதத்திற்கு பின் இவ்வழக்கை ஏற்றுகொள்வது குறித்த தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.முத்துகுமார் கூறுகையில் இத்திட்டத்தினால் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். அதேபோல் இத்திட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இத்திட்டம் நடைமுறைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித தெளிவான அரசாணைகளும், செலுத்திய சந்தாவை திருப்புவதற்கான வழிக்காட்டுதல்கள் இல்லாதது குறித்தும் நீதியரசர் அவர்களிடம் விளக்கி உள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கான தீர்ப்பு வரும் வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
              மேலும் இதுசார்பான வழக்கில் தங்களை இணைத்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் கீழ்காணும் E-MAIL முகவரியை  தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் அல்லது உங்கள் செல்லிடபேசி எண்ணை COMMENT BOXல் பதிவு செய்யவும் அல்லது தங்களின் மேலான கருத்துகளை E-MAILல் பகிரவும்
.
EMAIL ID : TEAMCPS2012@GMAIL.COM
மேலும் தகவலுக்கு ...

Tuesday, 5 February 2013

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பில், 8,000 இடங்கள் குறைந்தன: அரசுத் துறைகள் அலட்சியம்

டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105 காலி பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும், 8,000 பணியிடங்கள் குறைந்துள்ளன. காலியிடங்களை நிரப்புவதில், அரசு அதிகாரிகள் அக்கறை காட்டாததால், அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம், இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுகள் குறித்த அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், 27 துறைகளில் உள்ள, 35 பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, மொத்தம், 10 ஆயிரத்து, 105 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம், 18 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், 8 ஆயிரம் பணியிடங்கள் குறைந்துள்ளன. 2 லட்சம் காலியிடங்கள் தமிழக அரசுத் துறைகளில் மொத்தம், 12 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், சுமார், 2 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து, ஒவ்வொரு துறையிலும் பட்டியல் கேட்கப்பட்டது. சில துறைகளின் அதிகாரிகள் மட்டுமே கொடுத்தனர். காலியிடங்கள் பட்டியல் கொடுக்காமல், பல துறைகளில் தொடர்ந்து காலதாமதம் செய்தனர். அவர்களுக்கு, போன் மூலமாகவும், நேரிலும் சென்று பல முறை வலியுறுத்தியே, பட்டியலை பெற்றோம். 24 ஆயிரம் காலி பணியிடங்கள் பட்டியல் கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், குறைந்த அளவு, காலிப்பணியிட பட்டியல் மட்டுமே கிடைத்தது. எனினும், பல்வேறு அரசுத் துறைகளில் இருந்து, தொடர்ந்து காலியிட விவரங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். அந்த இடங்களுக்கான தேர்வு அட்டவணை, தனியாக வெளியிடப்படும் என்றும், தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்திருக்கிறார். எனவே, கடந்த ஆண்டு அளவிற்கு, மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை உயரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அரசுக்கு அக்கறை இல்லாதது ஏன்?

அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருந்தாலும், அவற்றை நிரப்புவதில், தமிழக அரசு ஆர்வம் காட்டுவது இல்லை. பல துறைகளில், ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. உதாரணமாக, கருவூலத் துறையில், ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கு சம்பளம், படிகள் என, ஏராளமான சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது. இது, அரசின் செலவினத்தை அதிகப்படுத்துகிறது. உலக வங்கியும், மத்திய அரசும், செலவினங்களை குறைத்தால் மட்டுமே மானியம் வழங்குவோம் என்று மாநில அரசுகளை நிர்பந்திக்கின்றன. இதன் பிரதிபலிப்பு தான், அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் லட்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தகவலுக்கு ...

Monday, 4 February 2013

IGNOU DECEMBER 2012 TERM END RESULT PUBLISHED

மேலும் தகவலுக்கு ...

தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.


தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
மேலும் தகவலுக்கு ...

Sunday, 3 February 2013

ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.கட்டாய கல்விச் சட்டத்தின் படி,

எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை, 12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.

ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில், இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.

புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு ...