welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Sunday 8 April 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: வினா - விடை


இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டயமாக்கி தமிழக ஆசிரியர்களின் தரத்தினை உயர்த்த தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
TET அறிவிப்பு: ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
* ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது.
* ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.
*   ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET)  பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.

*  கணினி ஆசிரியர்களுக்கு
ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் அமலில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு கணினி பாடம் கட்டாயமாக்கபடாததால் TET குறித்த அறிவிப்பு கணினி ஆசிரியர்களுக்கு TRB - யால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியர் நியமன வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அப்பொழுது இவர்களுக்கு TETகட்டயமாக்கபடும் என்பதாலும் இப்போதே இவர்கள் TET தேர்ச்சி பெற்று வைத்திருத்தல் நலம். இவர்கள் இப்பொழுது TET எழுத தடையேதுமில்லை.இவர்கள் விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டியவை.
பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்.
*  கணினியில் பி.எட் முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதுதல் நல்லது.
   1. Child Development and Pedagogy          -     30 மதிப்பெண்
   2. Tamil                                      -     30 மதிப்பெண்
   3. English                                                  -     30 மதிப்பெண்
   4. Maths and Science                                -    60 மதிப்பெண்

* குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
*  6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.
* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.
*  இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.
*  இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.
*  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
*  தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.
*  இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.
*   முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150
   1. Child Development and Pedagogy        -              30 மதிப்பெண்   2. Tamil or other language                         -              30 மதிப்பெண்
   3. English                                                 -              
30 மதிப்பெண்
   4. Maths                                                  -              
30 மதிப்பெண்
   5. Environmental studies                           -              
30 மதிப்பெண்

இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :
   1. Child Development and Pedagogy        -              30 மதிப்பெண்
   2. Tamil or other language                       -              30 மதிப்பெண்
   3. English                                                -              30 மதிப்பெண்
   4. Maths and Science                              -              60 மதிப்பெண்

2. சமுக அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy        -              30 மதிப்பெண்
    2. Tamil or other language                         -              30 மதிப்பெண்
    3. English                                                 -              30 மதிப்பெண்
    4. Social Studies                                       -              60 மதிப்பெண்

3. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :
   1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
   2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்
   3. English                                                -              30 மதிப்பெண்
   4. Maths&Science அல்லது Social Studies  -     60 மதிப்பெண்

* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies  என இரண்டும் எழுதவேண்டும்.
* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
*  TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.
* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.
*  இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.இ.டி) இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும். பி.எட். இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் இத்தேர்வில் பங்கு கொள்ளலாம்.
* தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
* விண்ணப்பத்தின் விலை ரூ.50.
* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து  'ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும்.
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 12 -ம் தேதி கடைசி நாள்.
*  8 +2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், எப்பகுதியில் வேண்டுமானாலும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து எந்த மாவட்டத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
* தாங்கள் தேர்வு எழுதும் மையம் அமைந்த மாவட்டத்தில்தான் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, மேலும் விண்ணப்பத்தை பெற்ற இடத்தில்தான் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
* இதனால், ஆசிரியர்கள் தங்களுக்கு வசதியான இடத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தேர்வெழுத விரும்பும் தேர்வு மையத்தைக் குறிப்பிட்டு எந்த மாவட்டத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* இதற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாக்களின் கடின அளவானது 12-ஆம் வகுப்பு வரை இருக்கும்.
* இந்த தேர்வில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று தேர்விற்கான நேரம் 1 1/2 மணி நேரத்தில் 150 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே.
*  குறைந்த நேரத்தில் அதிக வினாக்களுக்கு விடையளிக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
*  புதியதாக தொடங்கவிருக்கும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்படி இருக்கும்? மாதிரி கேள்வித்தாள் இதுவரை பார்த்ததில்லையே என்று தவிக்கும் மாணவர்களுக்காகவே டி.இ.டி. தொடர்பான இந்தப் பகுதியில் . இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் வினாக்கள் - விடைகள் பாடவாரியாக தொடர்ந்து வெளியிடுகிறோம்.
இனி தாள்:1, தாள்:2 இரண்டிற்கும் சேர்ந்தே பாடவாரியான வினாக்கள்- விடைகளைப் பார்ப்போம்...
 1. குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - Child Development and Pedagogy
1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)
3. கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.
4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
5. ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
7.முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
8.கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
12. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து
14. மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
15. ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
30. சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
40. 'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
41.உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
42. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
43. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
44. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
45. மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
46. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
47. ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.
48. பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை
49. அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
50. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
51. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
52. மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை
53. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.
54. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்
55. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா
56. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
57. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
58. உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
59. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
60. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
61. பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
62. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
63. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
64. உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை
65. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
66. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
67. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
68. உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.
69. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
70. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
71. வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
72. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்
73. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.
74. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
75. 'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
76. உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
77. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
78. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.
79. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
80. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
81. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
82. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
83. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
84. குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
85. குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
86. திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
87. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
88. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
89. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
90. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
91. ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
92. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
93. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
94. கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
95. ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
96. நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
97. ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.
98. எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
99. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
100. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
101. தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
102. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
103. உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
104. உற்று நோக்கலின் படி - நான்கு
105. லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
106. சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
107. சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
108. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
109. கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
110. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
111. மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
112. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
113. கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
114. அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
115.அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
116. மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் -  4-5 வயதுவரை
117. எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
118. எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
119. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
120. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
121. சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
122. உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
123 . உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
124. வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
125. பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
126. முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
127. மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
128. 'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
129. குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
130. தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
131. எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
132. வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.
133. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
134. பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
135  பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
136. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
137. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
138. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
139. கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
140. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
141. சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
142. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
143. தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
144. ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
145. காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் -  கட்டார்டு
146. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
147. சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
148. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
149. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
150. குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
151. ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
152. ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -   3 - 4 மாதங்கள்.
153. பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்
154. ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.
155. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
156. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
157. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
158. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
159. உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
160. உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
161. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
162. வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
163. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
164. கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
165. அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
166. நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
167. அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
168. கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
169. விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
170. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்
171. தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
172. ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
173. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
174. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
175. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
176. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
177. கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
178. எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
179. ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
180. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
181. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
182. உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
183. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
184. பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
                     


WHO IS WHO IN PSYCHOLOGY
1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
31. அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
32. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்
34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)
35. பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
36. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
37. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
41. மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
42. பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
43. தனி நபர் உளவியல் - ஆட்லர்
44. உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்
46. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
48. வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
54. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
55. படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
56. அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
57. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
58.மறத்தல் சோதனை - எபிங்காஸ்
59. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
60. பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
61. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
62. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
63. குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
64. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
65. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
66. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
67. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்