welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Wednesday 8 August 2012

சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை


சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை வரும் 2013&14ம் ஆண்டு நடைமுறைக்கு வர இருக்கிறது.

மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ புதிய தேர்வுமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளில் போர்டு தேர்வுகளுக்கு திறந்த புத்தகம் என்ற தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2013&14 முதல் இது நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


திறந்த புத்தம் என்ற உடன் புத்தகத்தை திறந்துவைத்து தேர்வு எழுதும் நடைமுறை அல்ல. தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுமோ 4 மாதங்கள் முன்பே அது தொடர்பாக மாணவ மாணவியருக்கு தெரிவிக்கப்படும். அதனை மட்டும் படித்தால் போதும் என்ற நிலை மாணவர்களுக்கு உருவாவதால் அவர்களின் மனரீதியான அழுத்தம், தேர்வு பயம் குறையும். முடிந்த வரை நன்றாக படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும் என்பது இதற்கு மற்றொரு காரணம் ஆகும்.



பள்ளிகளில் தேர்வு முறையில் புனரமைப்பு செய்வது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நியமித்த குழு இதுபோன்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் புதிய தேர்வு முறை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது